Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

புதைத்து வைக்கப்பட்ட 50 பொருட்கள் காட்சியில்

பார்வையாளர்களை 25 ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டுசெல்லும் கண்காட்சி, அடுத்த மாதம் 27-ஆம் தேதி-வரை அது நடைபெறும். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், 25 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 50 பொருட்கள், ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் இன்று-முதல் காட்சிக்கு வைக்கப்படவிருக்கின்றன. முதல் NTUC FairPrice பேரங்காடியின் விளம்பரப் பலகை, 1978-ஆம் ஆண்டின் கல்வி அறிக்கை போன்றவை அந்தப் பொருட்களில் அடங்கும்.

(1973ல் தோ பாயோவில் திறக்கப்பட்ட முதல் NTUC பேரங்காடி)

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சிங்கப்பூர் எத்தகைய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விளக்கும் வகையில் அந்தக் காட்சிப் பொருட்கள் இருக்கும். 1990-ஆம் ஆண்டு, சிங்கப்பூரின் 25-ஆம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அந்தப் பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டு, Empress Place-இல் புதைக்கப்பட்டன.

புதைத்து வைக்கப்பட்ட பொருட்களை, தேசிய மரபுடைமைக் கழகமும் ஆசிய நாகரிக அரும்பொருளகமும் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் தோண்டி எடுத்தன.

பார்வையாளர்களை 25 ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டுசெல்லும் கண்காட்சி, "Unearthed: Singapore at 25" என்று வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் 27-ஆம் தேதி-வரை அது நடைபெறும். கண்காட்சிக்கான அனுமதி இலவசம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்