Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்

சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 18 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் மூத்த அதிகாரிகளும் இங்கு வந்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக 18 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் மூத்த அதிகாரிகளும் இங்கு வந்துள்ளனர்.  வெளிநாட்டுப் பிரமுகர்களைப் பிரதமர் திரு. லீ சியென் லூங் பாடாங்கில் வரவேற்றார். பின்னர் அவர்கள் தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டங்களில் சிங்கப்பூர் அமைச்சர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் சேர்ந்துகொண்டனர். 

மலேசியப் பிரதமர் திரு. நஜிப் ரசாக், இந்தோனேசியத் துணையதிபர் திரு. யூசுஃப் கல்லா, புருணை சுல்தான் ஹஸனல் போல்கியா ஆகியோர் உற்சாகத்தோடு அணிவகுப்பில் பங்கேற்றனர். 

முன்னதாக, இன்று நண்பகலில், அதிபர் டோனி டான் கெங் யாம் பேராளர்களுக்கு இஸ்தானாவில் மதிய விருந்தளித்து உபசரித்தார். விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் திரு. லீயும் வெளியுறவு அமைச்சர் திரு. கா. சண்முகமும் பங்கேற்றனர். 

சிங்கப்பூருக்கு நட்புக் கரம் நீட்டிய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் அதிபர் டோனி டான் நன்றி தெரிவித்துக்கொண்டார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கியப் பங்களித்த அனைத்து நட்பு நாடுகளுடனும் சேர்ந்து கொண்டாடுவதில் பெருமிதங்கொள்வதாக டாக்டர் டான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்