Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மன்னார்குடியில் சிங்கப்பூர் பொன்விழா

இன்று சிங்கப்பூர், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில்,  சுமார் மூவாயிரம் குடும்பங்கள் கொண்ட உள்ளிக்கோட்டை என்ற தமிழக கிராமத்தில் சிங்கப்பூர்ப் பொன்விழா கொண்டாடப்படுகிறது. அதிசயம் என்னவென்றால், அங்கு சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை.

வாசிப்புநேரம் -
மன்னார்குடியில் சிங்கப்பூர் பொன்விழா

உள்ளிக்கோட்டை கிராமவாசிகள்.

மன்னார்குடி, தமிழ் நாடு: இன்று சிங்கப்பூர், தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சுமார் மூவாயிரம் குடும்பங்கள் கொண்ட உள்ளிக்கோட்டை என்ற தமிழக கிராமத்தில் சிங்கப்பூர்ப் பொன்விழா கொண்டாடப்படுகிறது. அதிசயம் என்னவென்றால், அங்கு சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ இவ்வருடம் மார்ச் மாதம் காலமானபோது இதே ஊரில்தான் அவருக்கென நினைவஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இவர்களுக்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைசெய்து இந்த ஊர்மக்கள் சிங்கப்பூரின் வளர்ச்சிக்காகப் பணியாற்றியிருக்கின்றனர்.

முன்பு சாதாரணக் களிமண் வீடுகளைக் கொண்டிருந்த உள்ளிக்கோட்டை கிராமம், இன்று தனது வயல்வெளிகளுக்கிடையே, சிங்கப்பூரில் உள்ளது போன்ற மாடி வீடுகளைப் பெற்றுள்ளது.

தமது ஊரில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குக் காரணம் 'சிங்கப்பூர் மோகம்' என்று திரு U ரமேஷ்குமார் கூறினார். சிங்கப்பூருக்கும் உள்ளிக்கோட்டைக்கும் நெடுங்காலத் தொடர்புண்டு என்றார் திரு ரமேஷ்குமார். தமது பதின்ம வயதில், உள்ளிக்கோட்டை வாசிகள் சிலர் மலாய் மொழியில் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்டதாக அவர் சொன்னார். அவர்கள் 1940களிலேயே வேலை தேடி சிங்கப்பூருக்குச் சென்றவர்கள். தங்கள் ஊரில் அவர்கள் மட்டுமே கான்கிரீட் வீடுகளை வைத்திருந்ததாகவும் அப்போதே அனைவரின் கவனத்தையும் சிங்கப்பூர் ஈர்க்க ஆரம்பித்து விட்டதாகவும் திரு ரமேஷ் குமார் சொன்னார்.

சிங்கப்பூரில் உள்ள கண்ணாடி நிறுவனத்தில் வேலை செய்த அவர் தற்போது கண்ணாடிக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். தமது வெற்றிக்குக் காரணம் ஒரு சீனர் என்றார் அவர். அந்தச் சீனர், சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ. உண்மை, நேர்மை, கடின உழைப்பு ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்ட திரு லீ தான் சொந்தத் தொழில் செய்யத் தமக்கு ஊக்குவிப்பாக இருந்தாரென்று திரு ரமேஷ்குமார் சொன்னார்.

சிறு கிராமமாக இருந்த உள்ளிக்கோட்டை இப்போது கடைகள், சமூக மண்டபங்கள், 24 மணி நேர மருத்துவமனைகள், ATM எனும் தானியக்க வங்கி இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அங்கு நிலங்களின் விலை மன்னார்குடியின் நகரப் பகுதிகளுக்கு ஒப்பான நிலையில் உள்ளதாகத் திரு ரமேஷ்குமார் கூறினார். இத்தகைய மாற்றங்களுக்குத் திரு லீயே காரணம் என்கின்றனர் அவ்வூர் மக்கள். சிங்கப்பூரில் வேலை செய்ய வாய்ப்புப் பெற்றதால் தங்களது வாழ்வு மேம்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அங்கு திரு லீக்கு மணிமண்டபம் எழுப்பப்படும். அது, ஆறு ஊர்களை இணைக்கும் ஒரு தளமாக இருக்கும். மணிமண்டபத்தில் சிங்கப்பூரைப் பற்றிய நூல்களைக் கொண்டுள்ள நூலகமும் இருக்கும்.

{திரு லீக்கான மணிமண்டபத்திற்கான நிலந்திருத்தும் நிகழ்ச்சி. படம் :Wong Pei Ting / TODAY}

மணிமண்டபத்திற்கான நிலந்திருத்தும் நிகழ்ச்சி சிங்கப்பூரின் 50-வது பிறந்த நாளான இன்று நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூர் எவ்வாறு தங்களது வாழ்க்கையில் நல்ல திருப்பத்தை உண்டாக்கியது என்பதைப் பற்றி மக்கள் பேசுவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்