Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சோங் பகார் ரயில்வே நிலையம் இன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சுமார் ஆறாயிரம் பேர் அதில் கலந்துகொண்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: வரலாற்றுச் சிறப்புமிக்க தஞ்சோங் பகார் ரயில்வே நிலையம் இன்று பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. சுமார் ஆறாயிரம் பேர் அதில் கலந்துகொண்டனர். பலரும் குடும்பத்தோடு வந்திருந்தனர். பெரியவர்களும் குழந்தைகளும் தண்டவாளத்தில் நின்று தம்படம் எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர். 

அந்தக்கால வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டுவரும் பல அங்கங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Chapteh, ஐந்தாங்கல் போன்ற கம்பத்து விளையாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தன. 

கடந்த காலத்தில், குறைவான வளங்களும், பொருட்களும் மட்டுமே இருந்ததால் அவற்றைக் கொண்டு புத்தாக்கச் சிந்தனையுடன் அத்தகைய விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன. சொந்தமாக விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி விளையாடும் பிள்ளைகளின் கற்பனைத் திறன் மேம்படவும் அவை உதவியாக இருந்தன. 

சிங்கப்பூர் நில ஆணையம், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. தேசியதின அணிவகுப்பைக் காண, ரயில் நிலையத்தில் பெரிய திரை அமைக்கப்பட்டிருந்தது. வீட்டு வரவேற்பறையில் இருந்து அணிவகுப்பைக் காண்பதைக் காட்டிலும் ஏராளமான சிங்கப்பூரர்களோடு இணைந்து அதைப் பார்ப்பது ஒரு புது அனுபவமாய் இருந்ததாகப் பலரும் கூறினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்