Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

' குவாட்டர்ஸ்' தமிழ் நாடகம்

சிங்கப்பூரின் பல இன சமூகம் இன்று ஒற்றுமையாக வாழ வழி வகுத்த பல அம்சங்களில் குவாட்டர்ஸ் வாழ்க்கை முறையும் ஒன்று எனக் கருதலாம். பலதரப்பட்ட மக்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த அந்த நாட்களை நினைவுகூருகிறது உள்ளூர் மேடை நாடகம் ஒன்று.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பல இன சமூகம் இன்று ஒற்றுமையாக வாழ வழி வகுத்த பல அம்சங்களில் குவாட்டர்ஸ் வாழ்க்கை முறையும் ஒன்று எனக் கருதலாம். பலதரப்பட்ட மக்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்த அந்த நாட்களை நினைவுகூருகிறது உள்ளூர் மேடை நாடகம் ஒன்று.

குவாட்டர்ஸ் என்ற நாடகம் சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டத்தின் தொடர்பில் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம். சிங்கப்பூரில் பல்லாயிரம் பேர் குவாட்டர்ஸ் எனும் செல்லமாக அழைக்கப்பட்ட அரசாங்கக் குடியிருப்புகளில் வாழ்ந்த காலம்.
அத்தகைய வீடுகளில் தமிழர்கள் பலரும் வசித்தனர். அந்த வாழ்க்கையை மீண்டும் கண்களுக்கு முன் கொண்டு வருகிறது குவாட்டர்ஸ் நாடகம்.

இரண்டு மாடிப் பொதுப் பயனீட்டுக் கழக குவாட்டர்சில் வசிக்கும் பல்லின ஊழியர்கள், குடும்பத்தினர். எப்போதும் பரபரப்புடன் இருந்த குவாட்டர்ஸ் சூழலை எடுத்துகாட்ட நாடகத்தில் 5 தலைமுறைகளைச் சேர்ந்த முப்பதுக்கும் அதிகமான கலைஞர்கள் நடித்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் மேடையேற்றுவதில் சில சவால்கள் இருக்கவே செய்தன. அந்தக் காலகட்டத்தில் பரவலாகப் பேசப்பட்ட மலாய், ஹொக்கியன் மொழிகள் நாடகத்தில் பயன்படுத்தப்பட்டன.

அவற்றைப் பேசி நடித்த அனுபவத்தை புதியவர்கள் பகிர்ந்துகொண்டனர்.குவாட்ர்ஸ் நாடகம் புதுப்பொலிவு கண்டுள்ள விக்டோரியா அரங்கத்தில்^ வரும் 19, 20ஆம் தேதிகளில் மேடையேறும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்