Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று கையொப்பமிட்டனர்.

தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சியுடன் சேர்த்து இதுவரை 54 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 41, மனித நேய மக்கள் கட்சிக்கு 5, இந்திய யூனிய முஸ்லிம் லீக் 5, மற்ற கட்சிகளுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 180 தொகுதிகள் தற்போது தி.மு.க. வசம் உள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்