Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வைப்புத்தொகையை இழந்து நிற்கும் விஜயகாந்த்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை மாவட்டத்தில் நின்ற விஜயகாந்த் வைப்புத்தொகையை இழந்துள்ளார்.

வாசிப்புநேரம் -

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை மாவட்டத்தில் நின்ற விஜயகாந்த் வைப்புத்தொகையை இழந்துள்ளார். மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவாகப் பெற்றிருப்பதால் வைப்புத் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தை அதிமுக வென்றுள்ளது.

இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் விஜயகாந்த். இப்போது அவரிடம் பதவியும் இல்லை, பணமும் இல்லை. சமூக ஊடகங்களில் அவரைப் பற்றி அடிக்கடி இடம்பெறும் கேலியும் கிண்டலும் விஜயகாந்திற்கு ஒன்றும் புதிதல்ல.தேர்தல் தோல்வியால் அத்தகைய பதிவுகள் மேலும் பெருகின.

2011ஆம் ஆண்டுத் தேர்தலில் 41 இடங்களை வென்ற 'கேப்டன்', அப்போதைய கூட்டணியின் முக்கியப் பங்காளியாகக் கருதப்பட்டார். அதிமுகவுடன் இருந்த கூட்டணி, விஜயகாந்திற்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முடிவுக்கு வந்தது.

இம்முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு 98 இடங்கள் கிடைத்தன. 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் அதிமுக 134 இடங்களை வென்றுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்