Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

'விஜயகாந்தை வரச்சொல்லி வற்புறுத்தப் போவதில்லை'

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்று தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

வாசிப்புநேரம் -

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியைப் பெறும் என்று தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். டில்லி நடைபெற்ற பாஜக பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து நேற்று இரவு சென்னை திரும்பிய தமிழிசை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் அவ்வாறு கூறினார்.

தேமுதிக இன்னமும் தங்களுடன் கூட்டணியில் இருப்பதாக நம்புவதாக தமிழிசை கூறினார். ஆனால் விஜயகாந்த் விரும்பாவிடில் அவரை வற்புறுத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 2014ல் பாஜக தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியை மீண்டும் வலுப்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழிசை தெரிவித்தார். கூட்டணி என்பது அவரவர் விருப்பம் என்று அது தானாக வர வேண்டும், வற்புறுத்தி வரக் கூடாது என்றும் அவர் சொன்னார்.

பாஜக, திமுக, மதிமுக, ஆகிய கட்சிகள் ஒவ்வொன்றும், தங்களுடன் விஜயகாந்த் இணைவாரா என வழி மேல் விழிவைத்துக் காத்திருக்கின்றன. தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி சேரப்போவதாக விஜயகாந்த் முன்பு கொண்டிருந்த நிலைப்பாடு மாறக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்