Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கோட்டைக்கு செல்வதை குறியாக வைத்திருக்கும் நடிகர்கள்

கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்கும் இடையிலான நட்பு இன்று நேற்று தொடங்கியதல்ல. 

வாசிப்புநேரம் -

கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்கும் இடையிலான நட்பு இன்று நேற்று தொடங்கியதல்ல.

இன்றைய நடிகர்கள் பலர் ஆட்சிப் பீடத்தில் அமர ஆசைப்பட்டு நடிகர்களில் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் ஆசை நிறைவேறி விட்டது.

சட்டசபைக்குள் செல்ல தங்களுக்கும் என்றாவது ஒருநாள் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆசையில் பல நடிகர்கள், நடிகைகள் தொடர்ந்து தவமாய் தவமிருக்கின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் அ.தி.மு.க-சார்பில் போட்டியிட மனு கொடுத்து காத்திருக்கின்றனர் ஏராளமான நடிகர், நடிகைகள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்த நடிகர் செந்திலுக்கு இந்தமுறை MLA ஆசை வந்து விட்டது.

சென்னையில் அவர் குடியிருக்கும் விருகம்பாக்கம் தொகுதிக்கும், பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கும் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கு சீட் கேட்டுள்ளார் சிங்கமுத்து.

மற்ற நடிகர்களான ஜே.கே.ரித்தீஷ் - கொளத்தூர், குண்டு கல்யாணம் - சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, சி.ஆர்.சரஸ்வதி - மயிலாப்பூர், விஜய் கார்த்திக் - விருகம்பாக்கம், தியாகு - தஞ்சை, சரவணன் - சேலம், மனோபாலா - ஆர்.கே.நகர், பாத்திமாபாபு -ஆயிரம்விளக்கு, ராமராஜன் - மதுரை, அஜய்ரத்னம் - அண்ணாநகர் என அவர்களுக்குச் சாதகமான இடங்களை கேட்டிருக்கிறார்கள்.

இவர்களைத்தவிர, பொன்னம்பலம், குயிலி, நிர்மலா பெரியசாமி, வாசுகி, ஜெயகோவிந்தன் ஆகியோரும் ஜெயலலிதாவின் நேர்காணலுக்காக காத்திருக்கிறார்கள்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்