Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வைகோவுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தி.மு.க

தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. ரூ.500 கோடி வரை தரத்தயாராக இருந்ததாக வைகோ குற்றம் சாட்டியிருந்தார். 

வாசிப்புநேரம் -

சென்னை: தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்க தி.மு.க. ரூ.500 கோடி வரை தரத்தயாராக இருந்ததாக வைகோ குற்றம் சாட்டியிருந்தார்.

அதனால் அவருக்கு எதிராக திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நீங்கள், தி.மு.க. கூட்டணியில் சேர, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு பணம் தருவதாக கருணாநிதி பேரம் பேசினார் என்று கூறியுள்ளீர்கள். 

நீங்கள் அளித்த பேட்டி ஊடகம் வாயிலாக வெளியில் வந்துள்ளது. அதேநேரம், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, தி.மு.க.வுடன், தே.மு.தி.க. தேர்தல் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியுள்ளார். 

எனவே பொய்யான தகவல்களை தெரிவித்து, என் கட்சிக்காரருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் தெரிவித்த பொய்யான குற்றச்சாட்டை 7 நாட்களுக்குள் வாபஸ் பெறவேண்டும். வருத்தமும் தெரிவிக்கவேண்டும். 

இல்லையென்றால் உங்கள் மீது என்னுடைய கட்சிக்காரர் சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்குகளை தொடர்வார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், என்று கருணாநிதி அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்