Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வாசனுக்கு வலை வீசுகிறது திமுக

தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
வாசனுக்கு வலை வீசுகிறது திமுக

வாசன்

சென்னை: தமாகாவை கூட்டணிக்குள் கொண்டு வர திமுக மேற்கொண்டு வரும் முயற்சிகள் காங்கிரஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக்கு ஒப்புக்கொண்டால் தமாகாவுக்கு 25 தொகுதிகளும், காங்கிரஸுக்கு 25 தொகுதிகளும் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக், மமக வுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.

தேமுதி கவை கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சி தோல்வி அடைந்த நிலை யில், புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக வேகம் காட்டி வருகிறது.

காங்கிரஸுடன் தமாகாவும் கூட்டணிக்கு வந்தால் கன்னியா குமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும் வெற்றி பெறலாம் என திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக அக்கட்சியினர் தெரி விக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 25-ம் தேதி சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் 85 தொகுதிகளை கேட்க, 25-க்குமேல் வாய்ப்பு இல்லை என திமுக அனுப்பிவிட்டது.

இதனால் சோனியா, ராகுலுடன் பேசிவிட்டு வருவதாகக் கூறியிருக்கிறார் ஆசாத்.

கட்சி தொடங்கியது முதல் அதிமுக வுக்கு ஆதரவாகவே வாசன் செயல்பட்டு வருகிறார்.

ஆனால், தமாகாவுக்கு 16 தொகுதிகள் வரை மட்டுமே தரமுடியும் என அதிமுக கூறுகிறது. 25 தொகுதிகளாவது இருந்தால்தான் கட்சியில் உள்ள முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களை சமாளிக்க முடியும் என வாசன் நினைக்கிறார். 

அதிமுக விடாப்பிடியாக இருந்தால் திமுக அல்லது மக்கள் நலக் கூட்ட ணிக்கு செல்வதைத்தவிர வேறுவழியில்லை என்கின்றனர் அக்கட்சியினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்