Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசிய விளையாட்டுகளில் மேலும் மூவர் ஊக்க மருந்தை உட்கொண்டதாகத் தகவல்கள்

இவ்வாண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தென் கிழக்காசிய விளையாட்டுகளில் நடத்தப்பட்ட ஊக்க மருந்துச் சோதனைகளில் மூன்று விளையாட்டாளர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டது தெரியவந்துள்ளதாக,  தென் கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசிய விளையாட்டுகளில் மேலும் மூவர் ஊக்க மருந்தை உட்கொண்டதாகத் தகவல்கள்

(படம்: Bernama)

இவ்வாண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த தென் கிழக்காசிய விளையாட்டுகளில் நடத்தப்பட்ட ஊக்க மருந்துச் சோதனைகளில் மூன்று விளையாட்டாளர்கள் ஊக்க மருந்தை உட்கொண்டது தெரியவந்துள்ளதாக, தென் கிழக்காசிய விளையாட்டுச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முக்குளிப்புப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற மலேசியாவின் வெண்டி இங் யான் யீ (Wendy Ng Yan Yee), தாய்லந்தின் சிலாட் வீரர் நுரிசான் லோசேங் (Nurisan Loseng), நீச்சல் வீராங்கனை பென்ஜாபோர்ன் ஸ்ரீபான்னொம்தொர்ன் (Benjaporn Sriphanomthorn) ஆகியோர் அவர்கள்.

அவர்களுடைய பதக்கங்கள் மீட்டுக்கொள்ளப்படும் என்று சம்மேளனம் தெரிவித்தது.

அதனை அடுத்து, சிங்கப்பூர் நீச்சல் அணியைச் சேர்ந்த டான் யீ சுவேன் (Tan Yi Xuan), ஃபோங் கே யியேன் (Fong Kay Yian) ஆகியோருக்கு மூன்று மீட்டர் ஒருங்கிணைந்த முக்குளிப்புப் போட்டியில் தங்கம் வழங்கப்படும். முன்னதாக, மலேசியாவின் நீச்சல் வீராங்கனை இங், தனது சக வீராங்கனையுடன் அந்தப் பதக்கத்தை வென்றார்.

அதுமட்டுமின்றி, சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனையான ஷாண்டெல் லியூவிற்கு (Chantal Liew) 10-கிலோமீட்டர் நீச்சல் போட்டியில் முன்பு கிடைத்த வெள்ளிப் பதக்கத்திற்குப் பதிலாக இப்போது தங்கம் வழங்கப்படும். முன்னதாக, தாய்லந்தின் பென்ஜாபோர்னுக்குத் தங்கம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்மூலம், இவ்வாண்டு தென் கிழக்காசிய விளையாட்டுகளில், சிங்கப்பூர் பெற்ற தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 58-க்கு அதிகரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்