Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

14 வயதில் காற்பந்து வீரரான இளையர்

அமெரிக்காவின் Orange County காற்பந்துக் குழு 14 வயது பிரான்சிஸ் ஜேக்கப்ஸை  (Francis Jacobs) அதன் அணியில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
14 வயதில் காற்பந்து வீரரான இளையர்

படம்: Pixabay

லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் Orange County காற்பந்துக் குழு 14 வயது பிரான்சிஸ் ஜேக்கப்ஸை  (Francis Jacobs) அதன் அணியில் சேர ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கக் காற்பந்து வரலாற்றில், ஆக இளைய தொழில்முறை விளையாட்டாளராக இடம்பெற்றுள்ளார் ஜேக்கப்ஸ்.

14 வயது 4 மாதங்கள் நிரம்பிய ஜேக்கப்ஸ் தமது அணியில் சேருவது குறித்துப் பெருமிதம் அடைவதாக அவரது பயிற்றுவிப்பாளர் கூறினார். இளையரின் திறமையைப் பார்த்து அசந்துபோனதாகக் கூறினார் அவர்.

இதற்கு முன் இரண்டு காற்பந்துக் குழுக்களில் பயிற்சி பெற்று வந்தார் ஜேக்கப்ஸ்.

ஜேக்கப்பைப் போலவே 14 வயது 5 மாதங்களில் காற்பந்துக் குழுவில் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஃபிரேடி அடு (Freddy Adu). 2003இல்  DC United அணியைச் சேர்ந்த அவர், பல முறை காற்பந்துக் குழுக்களிடையே கைமாறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்