Images
  • lcw
    (படம்: REUTERS/Athit Perawongmetha)

இறுதி காமன்வெல்த் ஆட்டத்தில் மலேசிய பேட்மிண்டன் வீரர் லீ சோங் வேய்க்குத் தங்கம்

கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா: மலேசியாவின் பேட்மிண்டன் வீரர் லீ சோங் வேய் தமது இறுதி காமன்வெல்த் விளையாட்டுகளில் வாகை சூடியுள்ளார்.

உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தை அவர் 19-21 21-14 21-14 என்ற செட் கணக்கில் இன்று (ஏப்ரல் 15) வென்றுள்ளார்.

2006இலும் 2010இலும் தங்கம் வென்ற லீ காலில் ஏற்பட்ட காயத்தினால் 2014இல் காம்ன்வெல்த் விளையாட்டுகளில் தொடர்ந்து மூன்றாவது தங்கத்தை வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லீ வெற்றி பெறுவார் என்று உறுதியாகக் கூறமுடியாத நிலை இருந்தது. காரணம், கடந்த வாரம் நடந்த கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்திடம் தோல்வியடைந்தார் லீ. இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடினார் அவர்.

ஸ்ரீகாந்த்தை விட 10 வயது மூத்தவராக இருந்தாலும், "வயது வெறும் எண் தான், வயதை மறந்து ஆடுவேன்" என்று கூறி இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினார் லீ.  

Top