Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

யங் லையன்ஸ் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராய் ஃபாண்டி அஹ்மாட் நியமனம்

உள்ளூர் காற்பந்துப் பிரபலம் ஃபாண்டி அஹ்மாட் (Fandi Ahmad) தலைமைப் பயிற்றுவிப்பாளராய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
யங் லையன்ஸ் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராய் ஃபாண்டி அஹ்மாட் நியமனம்

(படம்: Fandi Ahmad Official/Facebook)

உள்ளூர் காற்பந்துப் பிரபலம் ஃபாண்டி அஹ்மாட் (Fandi Ahmad) யங் லையன்ஸ் (Young Lions) காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராய் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவர் அந்தப் பணியைத் தொடங்கலாம் என்று நேற்று சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் அறிவித்தது.

அவர் யங் லையன்ஸ் காற்பந்துக் குழுவை அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கும், அதற்கு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தென் கிழக்காசிய விளையாட்டுகளுக்கும் தயார்ப்படுத்துவார் என்றும் சங்கம் அறிவித்தது.

55 வயது ஃபாண்டி அடுத்த ஆண்டின் S லீக் போட்டிகைளயும் வழிநடத்திச் செல்வார். அவருக்குக்குத் துணையாக முன்னாள் தேசிய காற்பந்து குழுவின் தலைவர் நஸ்ரி நசிர் (Nazri Nasir) அமர்த்தப்பட்டுள்ளார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் வின்சண்ட் சுப்ரமணியமிடம் (Vincent Subramaniam) இருந்து தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஃபாண்டி ஏற்றுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்