ஒரே கொடியின்கீழ் அணிவகுத்துச் செல்ல இரு கொரியாக்களும் இணக்கம்
இரு கொரியாக்களும், எதிர்வரும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், ஒரே கொடியின்கீழ் அணிவகுத்துச் செல்ல இணங்கியிருக்கின்றன.
இரு கொரியாக்களும், எதிர்வரும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில், ஒரே கொடியின்கீழ் அணிவகுத்துச் செல்ல இணங்கியிருக்கின்றன.
இரு கொரியாக்களையும் சேர்ந்த விளையாட்டாளர்களைக் கொண்ட ஒரு பனிஹாக்கி குழுவையும் களமிறக்க அவை திட்டம் கொண்டுள்ளன.
கொரிய தீபகற்பத்தில், பதற்றத்தைத் தணிக்கும் அறிகுறியாக அது தோன்றுகிறது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கும், உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கும், 550 பேர் அடங்கிய பேராளர்க் குழுவை அனுப்பவிருப்பதாக வடகொரியா தெரிவித்தது.
அது பற்றி, தென்கொரியா தகவல் அளித்தது.