Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

திரும்பிப் பார்ப்போமா: 2020ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டுப் போட்டிகள்

1. தோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் ஏற்று நடத்துகிறது. தோக்கியோவில் நடக்கும் போட்டிகள் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

வாசிப்புநேரம் -
திரும்பிப் பார்ப்போமா: 2020ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டுப் போட்டிகள்

(கோப்புப் படம்: REUTERS/Issei Kato)

1. தோக்கியோ ஒலிம்பிக் போட்டி:

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் ஏற்று நடத்துகிறது. தோக்கியோவில் நடக்கும் போட்டிகள் ஜூலை மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

போட்டிக்கான விளையாட்டு அரங்கங்கள் கட்டிமுடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

படம்: REUTERS

2. யூரோ காற்பந்துக் கிண்ணப் போட்டிகள் :

16ஆவது யூரோ காற்பந்துக் கிண்ணப் போட்டி 2020ஆம் ஆண்டு நடக்கிறது.

இம்முறை 12 நகர்களில் போட்டிகள் நடக்கின்றன. 24 அணிகள் பங்கேற்கின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை யூரோ காற்பந்துக் கிண்ணப் போட்டிகள் இடம்பெறுகின்றன.

12 ஜூன் தொடங்கி 12 ஜூலை போட்டிகள் முடிவடைகின்றன.

3. கிரிக்கெட் T20 உலகக் கிண்ணம்:

கிரிக்கெட் T20 உலகக் கிண்ணப் போட்டியை இம்முறை ஆஸ்திரேலியா ஏற்று நடத்துகிறது.

18 அக்டோபரில் தொடங்கும் போட்டி 15 நவம்பரில் முடிவடைகிறது.

இறுதி ஆட்டம் மெல்பர்ன் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

ஈராண்டுக்கு ஒருமுறை T20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடப்பது வழக்கம்.

படம்: REUTERS

4. இளையர்களுக்கான ஒலிம்பிக் போட்டி:

இளையர்களுக்கான 2020ஒலிம்பிக் போட்டியை சுவிட்சர்லந்து ஏற்று நடத்துகிறது.

லாசன் நகரில் போட்டிகள் நடக்கின்றன. போட்டி, ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22இல் முடிகிறது.

5. உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுப் போட்டிகள்:

உடற்குறையுள்ளோருக்கான 2020 ஆசியான் விளையாட்டுப் போட்டிகளை பிலீப்பீன்ஸ் ஏற்று நடத்துகிறது.

ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் போட்டியில் திமோர் லெஸ்ட்டே உள்ளிட்ட 11 நாடுகள் கலந்து கொள்கின்றன.

18 ஜனவரி தொடங்கிய போட்டிகள் 25 ஜனவரி முடிவடைகின்றன.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்