Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு அடுத்த வாரம் மீண்டும் களமிறங்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் செரினா வில்லியம்ஸ்

(படம்: Photo: AFP/Paul Crock)

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ்
(Serena Williams), பிள்ளைப்பேற்றுக்குப் பிறகு அடுத்த வாரம் மீண்டும் களமிறங்கவிருக்கிறார்.

அபுதாபியில் இம்மாதம் 30ஆம் தேதி ஜெலின ஒஸ்டபெங்கொவுடன் (Jelena Ostapenko) நட்புமுறை ஆட்டத்தில் அவர் பொருதுவார்.

ஆடவருக்கான முபடல (Mubadala) உலக டென்னிஸ் வெற்றியாளர் போட்டிகள் நடைபெறும் வேளையில் அந்த நட்புமுறை ஆட்டம் இடம்பெறும்.

36 வயது வில்லியம்ஸுக்குக் கடந்த செப்டம்பர் மாதம் பெண் மகவு பிறந்தது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியப் பொது விருதை வென்ற அவர் அதற்குப் பிறகு போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை.

மீண்டும் களமிறங்குவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாய் அவர் குறிப்பிட்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்