குத்துச் சண்டையிலிருந்து ஓய்வுபெற்று மீண்டும் களமிறங்கிய மேவருக்கு வெற்றி
பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த குத்துச்சண்டை போட்டியில் பிரபலக் குத்துச்சண்டை வீரர் (Floyd May-weather Junior) ஃபுலோய்ட் மேவெதர் ஜூனியர் வெற்றி பெற்றுள்ளார். லாஸ் வேகசில் நடைபெற்ற போட்டியில் அவர், தற்காப்புக் கலைஞர் (Conor McGregor) கோனர் மெக்கிரகரை வென்றார்.
ஓய்வுபெற்றிருந்த 40 வயது (May-weather) மேவெதர் மீண்டும் களத்தில் இறங்கினார்.
போட்டியில் வென்றால் குறைந்தது 100 மில்லியன் டாலர் பரிசு உறுதி என்ற நிலை.
அவரைத் தோற்கடித்திருந்தால், (McGregor) மெக்கிரகர் $30 மில்லியனைத் தட்டிச்சென்றிருக்கலாம்.
கலப்புத் தற்காப்புக் கலைஞரான மெக்கிரகர் இதற்கு முன் நிபுணத்துவ முறையில் குத்துச்சண்டையில் ஈடுபட்டதில்லை.
மேவெதர், மெக்கிரகர் இருவரும் சரிசமமாகப் போட்டியிட்டனர்.
10ஆவது சுற்றில் மேவெதரின் கை ஓங்கியிருந்தது.
குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து 50 முறை வெற்றிபெற்று சாதனை படைத்த பெருமையும் மேவெதரைச் சேர்கிறது.