Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

2017 - விளையாட்டில் சில முக்கிய நிகழ்வுகள்

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் நட்சத்திரம் ஹேரி கேன் இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஆக அதிக கோல்களை அடித்த காற்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

வாசிப்புநேரம் -

காற்பந்து: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் நட்சத்திரம் ஹேரி கேன் இந்த ஆண்டு ஐரோப்பாவில் ஆக அதிக கோல்களை அடித்த காற்பந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த 7 ஆண்டுகளாக லயனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவர் மட்டுமே புரிந்துவந்த சாதனையைத் தன்வசப்படுத்திக்கொண்டார் கேன்.

திடல்தடப் போட்டிகள்: உலகின் ஆகச் சிறந்த ஓட்டப் பந்தய வீரராகக் கருதப்படும் உசேய்ன் போல்ட் ஓய்வுபெற்றார். 11 முறை உலகப் போட்டிகள் விருதை வென்றுள்ள போல்ட், அடுத்தடுத்த 3 ஒலிம்பிக் போட்டிகளில், 100 மீட்டர், 200 மீட்டர், 4க்கு 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவுகளில் தங்கம் வென்ற ஒரே வீரர் பெருமையைப் பெற்றவர்.

தென்கிழக்காசிய விளையாட்டுகள் 2017: இந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் 58 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 188 பதக்கங்களை வென்று பட்டியலில் நான்காம் இடத்தில் முடித்தது சிங்கப்பூர்.

காற்பந்து: வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூர்க் காற்பந்துச் சங்கத்தின் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதில் வென்ற திரு. லிம் கியா தோங் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.

காமன்வெல்த் விளையாட்டுகள்: 2022 விளையாட்டுகள் இங்கிலாந்தின் பெர்மிங்ஹேம் நகரில் நடைபெறும் என்பது சில நாட்களுக்கு முன் முடிவானது.

காற்பந்து: பிரேசிலிய நட்சத்திரம் நேய்மார், உலகின் ஆக அதிக மதிப்புமிக்க காற்பந்து வீரரானார். அவரை பார்சலோனாவிலிருந்து வாங்க பாரிஸ் செயின்ட் ஜர்மான் கொடுத்த தொகை, சுமார் 222 மில்லியன் யூரோ!

31-வயது நடால், உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து 2017ஐ நிறைவுசெய்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்