Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென்கிழக்காசிய விளையாட்டுகள் - சிங்கப்பூர் அணி 900ஆம் தங்கப் பதக்கத்தை வென்றது!

தென்கிழக்காசிய விளையாட்டுகள் 2019-இல் சிங்கப்பூர் 53 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

வாசிப்புநேரம் -


தென்கிழக்காசிய விளையாட்டுகள் 2019-இல் சிங்கப்பூர் 53 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

அதில் 23 தங்கப் பதக்கங்களை சிங்கப்பூரின் நீச்சல் போட்டியாளர்கள் வென்றனர்.

தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூர் 53 தங்கம், 46 வெள்ளி, 68 வெண்கலம் என 167 பதக்கங்களை வென்றுள்ளது.

அதில் 51 பதக்கங்கள் முதல்முறையாகத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள் பெற்றுத் தந்தவை.

அத்துடன் தற்போது சிங்கப்பூர் ஒரு புதிய சாதனையும் படைத்துள்ளது.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூர் அதன் 900ஆவது தங்கப் பதக்கத்தை வென்றது.

சிங்கப்பூர் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் 50க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வெல்வது இது மூன்றாவது முறை.

இந்த ஆண்டு 15 போட்டிகளில் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் ஆக அதிகப் பதக்கங்களை வென்றது 2015 போட்டிதான். அதில் 84 தங்கம், 73 வெள்ளி, 102 வெண்கலப் பதக்கங்களை சிங்கப்பூர் வென்றது.

கடந்த முறைப் போட்டியில் 58 தங்கம், 57 வெள்ளி, 73 வெண்கலப் பதக்கங்களை சிங்கப்பூர் வென்றது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்