Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சீருடற்பயிற்சிப் பிரிவில் இளம் வெற்றியாளரின் மாறுபட்ட பிள்ளைப்பருவம்

சிங்கப்பூர்த் தேசிய சீனப் பல்லிசைக் குழுவின் ஆக இளையவர் பேன் அன்னான் (Pan Annan). ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் மீத்திறன் கொண்ட மாணவர்களில் அவரும் ஒருவர்.

வாசிப்புநேரம் -
சீருடற்பயிற்சிப் பிரிவில் இளம் வெற்றியாளரின் மாறுபட்ட பிள்ளைப்பருவம்

படம்: Channel NewsAsia

சிங்கப்பூர்த் தேசிய சீனப் பல்லிசைக் குழுவின் ஆக இளையவர் பேன் அன்னான் (Pan Annan). ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் மீத்திறன் கொண்ட மாணவர்களில் அவரும் ஒருவர்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அவரின் வயது 10. ஒலிம்பிக் சீருடற்பயிற்சிப் பிரிவில் போட்டியிட வேண்டும் என்பது பேனின் கனவு. அதற்குச் சில தியாகங்களை அவர் இந்த வயதிலேயே செய்ய வேண்டியிருந்தது.

ஒவ்வொரு முறையும் விளையாட்டு இடத்தைக் கடந்துபோகும்போது பேன்-னால் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு செல்ல மட்டுமே முடிகிறது என்கிறார்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

பிற நண்பர்களோடு நேரத்தைச் செலவிட்டு விளையாட முடியாதது சில வேளைகளில் வருத்தம் அளிக்கும் என்றார் அவர்.

இருப்பினும் இலக்கை அடைவதற்காக நேரத்தை முறையாகத் திட்டமிட்டுச் செலவிடுவதில் பெருமிதம் கொள்கிறார் பேன்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அன்றாடம் மூன்று மணி நேரம் முழுவீச்சாகப் பயிற்சி செய்யும் பேன் ஒருநாள் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கப்போவதாக நம்புகிறார்.

வெற்றியடைவதற்கான முதல்படி, ஒருவர் தம்மைத் தாமே வெற்றிகொள்வது என்று சொன்னார் அவர். சீனா உட்பட சில அனைத்துலகப் போட்டிகளில் பேன் ஏற்கனவே வெற்றிக்கிண்ணங்களைப் பெற்றுள்ளார்.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

ஆரம்பத்தில் சீருடற்பயிற்சிக் குழுவில் இடம்பெறவதற்கு அவரின் தாயார் அனுமதிக்கவில்லை. அதுகுறித்துக் கேள்விப்படாத அம்மாவுக்குப் பிள்ளை, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் எனத் தோன்றியது.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

பிள்ளையைப் பயிற்சிக்குப் போக வேண்டாம் எனக் கண்டித்துள்ளார். ஆனால் பேன் விடவில்லை. கண்ணீரால் அம்மாவின் மனத்தைக் கரைத்துள்ளார்.

ஈராண்டுக் கடுமையான பயிற்சி. கடந்த ஆண்டு சீருடற்பயிற்சிப் பிரிவுக்கான தேசியக் கிண்ணத்தை வென்றார் பேன். அதன்வழி முதல் அனைத்துலகப் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது.

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

தொடர்ந்து அயராது உழைக்கும் பேன் அடுத்ததாகத் தென்கிழக்காசிய விளையாட்டுகளிலும் இளையர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் போட்டியிட வேண்டும் என எண்ணம் கொண்டுள்ளார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்