Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் உதவியைக் கேட்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம்

கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் உதவியைக் கேட்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம்

வாசிப்புநேரம் -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தங்களுக்கு ஆதரவு கொடுக்குமாறு கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் உதவியைக் கேட்டுள்ளது.

அடுத்து மாதம் நடைபெறவுள்ள அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தக் கூட்டத்தில் முழு நேர உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால்தான் ஆப்கானிஸ்தான் விளையாட்டுகளில் ஈடுபடமுடியும்.

அதனால் இப்போது அது முழு நேர உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான் ஆட்சியைப் பிடித்த பிறகு அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அதிகக் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதில் ஆப்கானிஸ்தானும் விளையாடுகிறது.

கிரிக்கெட் விளையாட்டுகளில் அண்மைக் காலமாக ஆப்கானிஸ்தான் பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது.

இப்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்