Images
  • tokyo 2020
    (கோப்புப் படம்: REUTERS/Issei Kato)

தோக்கியோ 2020: வேலையில்லாத் தொண்டூழியர்கள்... இப்போது பார்வையாளர்களாக...

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக, போட்டிகள் தடங்கலின்றி நடைபெறுவதற்குத் தொண்டூழியர்களின் பங்கு இன்றியமையாததாகக் கருதப்படுவதுண்டு.

மொழிபெயர்ப்பாளர்கள், வழிகாட்டிகள், ஓட்டுநர்கள் என அனைவரும் தொண்டூழியர்களே.

ஆனால், இம்முறை போட்டிகளில் பார்வையாளர்கள் இல்லாததால், தொண்டூழியர்களுக்கு அவ்வளவாக வேலையில்லை.

அதனால், பணியமர்த்தப்பட்டுள்ள சுமார் 80,000 தொண்டூழியர்கள், பார்வையாளர்களாகிவிட்டனர்.

தேவைக்கு அதிகமாகத் தொண்டூழியர்கள் இருப்பதால், பலருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொண்டூழியர்களின் பங்கு மறுபரிசீலனை செய்யப்படுவதாக தோக்கியோ 2020 ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

ஏமாற்றமளிப்பதைத் தவிர்க்கவே தொண்டூழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

-Reuters

Top