Images
  • amita berthier
    (படம்: AFP/Fabrice Coffrini)

சிங்கப்பூரின் வாட்போர் வீராங்கனை அமிதா பர்த்தியர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்

தோக்கியோ 2020 ஒலிம்பிக் மகளிர் வாட்போர் (fencing) போட்டியிலிருந்து சிங்கப்பூரின் அமிதா பர்த்தியர் (Amita Berthier) வெளியேறினார்.

வாட்போரில் உலகத் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் லீ கைஃபரிடம் (Lee Kiefer) 15க்கு 4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் தோல்வி கண்டார்.

நண்பர்களான இருவருக்கும், ஒரே பயிற்றுவிப்பாளர் தான் பயிற்சி அளிக்கிறார்.

பயிற்சியின்போது தாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என பர்த்தியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று தம்மால் முடிந்த வரை கடுமையாகச் சண்டையிட வேண்டும் என்பதே தம் இலக்காக இருந்ததாய் அவர் தெரிவித்தார்.

வாட்போருக்கான உலகப் பட்டியலில் 60ஆம் நிலையில் இருக்கும் பர்த்தியர், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வது இதுவே முதன்முறை.

தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம்.

meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்; சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்! 

Top