Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பிரபல டென்னிஸ் வீரர் ஏண்டி மர்ரே ஓய்வு பெறவுள்ளார்

உலகத் தரவரிசையில் முன்பு முதல் நிலையில் இருந்த டென்னிஸ் நட்சத்திரம் ஏண்டி மர்ரே (Andy Murray) இவ்வாண்டு விளையாட்டில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
பிரபல டென்னிஸ் வீரர் ஏண்டி மர்ரே ஓய்வு பெறவுள்ளார்

(படம்: AFP)

உலகத் தரவரிசையில் முன்பு முதல் நிலையில் இருந்த டென்னிஸ் நட்சத்திரம் ஏண்டி மர்ரே (Andy Murray) இவ்வாண்டு விளையாட்டில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்துள்ளார்.

பல முறை காயமடைந்துள்ள அவர், வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் விம்பிள்டன் (Wimbledon) போட்டி வரை தாக்குப் பிடிக்க விரும்புகிறார்.

இருப்பினும், தற்போது நடைபெறும் ஆஸ்திரேலியப் பொதுவிருதுப் போட்டியே தாம் பங்கேற்கவிருக்கும் இறுதிப் போட்டியாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

மூட்டுப் பிரச்சினையால், 31 வயது மர்ரே கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சைக்குச் சென்றார்.

அதன் பிறகு, தமது பழைய நிலைக்கு வர அவரால் இயலவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்