Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: நீச்சலில் உலக சாதனை படைத்து, ஒலிம்பிக்சிலும் கலந்துகொண்ட அங் பெங் சியோங்

அங் பெங் சியோங் (Ang Peng Siong) தேசிய நீச்சல் விளையாட்டு வீரர்.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக்சில் சிங்கப்பூர்: நீச்சலில் உலக சாதனை படைத்து, ஒலிம்பிக்சிலும் கலந்துகொண்ட அங் பெங் சியோங்

(படம்: SNOC)

அங் பெங் சியோங் (Ang Peng Siong) தேசிய நீச்சல் விளையாட்டு வீரர்.

சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றம் 3 முறை இவருக்கு ஆண்டின் சிறந்த விளையாட்டாளர் (“Sportsman of the Year”) எனும் விருதை அளித்து கௌரவித்தது.

1982, 1983, 1984 எனத் தொடர்ந்து 3 ஆண்டுகள் அந்த விருதைப் பெற்ற முதல் விளையாட்டாளர் அவரே.

சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் Hall of Fame தலைசிறந்த விளையாட்டாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

1982-இல், அங் படைத்த சாதனை சிங்கப்பூரை உலக வரைபடத்தில் உற்றுநோக்க வைத்தது.

இண்டியானா போலிஸ் (Indianapolis) நகரில் நடந்த அமெரிக்க தேசிய வெற்றியாளர் கிண்ணப் போட்டியின், 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலை 22.69 வினாடிகளில் முடித்து அவர் தங்கம் வென்றார்.

அதன் மூலம் அந்த ஆண்டு உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர்களில் முதலிடத்தைப் பிடித்தார் அங்.

33 வருடங்களுக்கு நீடித்த தேசியச் சாதனையும் அதுவே.

இரண்டு முறை அங் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டார்.

1984 லாஸ் ஏஞ்சலிஸ் (Los Angeles) ஒலிம்பிக்சில் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலிலும், 1988 சோல் ஒலிம்பிக்சின் 50 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலிலும் அவர் B இறுதிச்சுற்று வரை சென்றார்.

அங் முதல் 16 விளையாட்டாளர்களில் இடம்பிடித்தார்.

தகவல்: SNOC, NLB

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்