Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

யூரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டம்: ஆர்சனல், செல்சி பலப்பரீட்சை

யூரோப்பா லீக் கிண்ணத்தின் இறுதியாட்டம் இன்று பின்னிரவு 3 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
யூரோப்பா லீக் கிண்ண இறுதியாட்டம்: ஆர்சனல், செல்சி பலப்பரீட்சை

படம்: AFP/Alexander NEMENOV

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

யூரோப்பா லீக் கிண்ணத்தின் இறுதியாட்டம் இன்று பின்னிரவு 3 மணிக்குத் தொடங்கவிருக்கிறது.

அதில் ஆர்சனல், செல்சி அணிகள் மோதுகின்றன.

ஆட்டம், அஸர்பைஜானின் (Azerbaijan) தலைநகர் பாக்குவில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் இங்கிலீஷ் பீரிமீயர் லீகில் பல முறை மோதியுள்ளன, ஆனால் இம்முறை தங்களுக்குப் பழக்கமில்லாத இடத்தில் சந்திக்கின்றன.

ஆர்சனல் அணியின் ஆர்மீனிய ஆட்டக்காரரான ஹென்ரிக் மெக்கிடாரியன் (Henrikh Mkhitaryan) பாதுகாப்புக் காரணங்களுக்காக அஸர்பைஜான் செல்லவில்லை. அது ஆர்சனலுக்குப் பாதகமாய் அமையலாம்.

ஆர்சனல் அணி கிண்ணத்தை வென்றால் அது சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதிபெறும்.

செல்சி அணி ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்