Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு

வாசிப்புநேரம் -

COVID-19 கிருமித்தொற்று காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

மூன்று நாள்களுக்கு முன்னர், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வீரர்கள் ஆவலாக உள்ளனர் என்று ஆஸ்திரேலியா கூறியது.

ஆனால் தற்போது அதிகரித்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள், வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் அந்த முடிவு எடுத்ததாக ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழு தெரிவித்தது.

2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டால் அதில் கலந்துகொள்வதாக ஆஸ்திரேலியா உறுதியளித்தது.

ஆஸ்திரேலியாவில் இடம்பெறவிருந்த மற்ற விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன.

இன்று காலை கனடா, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தது.

2020 ஒலிம்பிக் போட்டியை வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய சூழலில் ஒலிம்பிக் போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்