Images
  • aus open
    படம்: REUTERS

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ்: 3 பேருக்கு, பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட கொரோனா கிருமித்தொற்று உறுதி

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டிக்குத் தொடர்புடைய மூன்று பேருக்கு பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட புதுவகைக் கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் மூன்று பேரும் ஆஸ்திரேலியா சென்றடைந்தது முதல் மெல்பர்ன் நகரில் உள்ள ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் விளையாட்டாளர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

விக்டோரியா மாநிலத்தில் 17 நாள்களாக சமூக அளவில் எந்த நோய்த்தொற்றுச் சம்பவமும் பதிவாகவில்லை.

ஆஸ்திரேலியப் பொதுவிருது டென்னிஸ் போட்டியை வெற்றிகரமாக நடத்த ஏற்பாட்டுக்குழுவினர் தீர்மானமாக உள்ளனர்.

பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் போட்டியில் கலந்துகொள்ள 72 விளையாட்டாளர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.
 

Top