Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்துப் போட்டியின்போது எதிரணி வீரரைக் கோபத்தில் முத்தமிட்ட வீரர்

காற்பந்துப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கோபமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதும், திட்டுவதும் அவ்வப்போது நடப்பது இயல்பு.

வாசிப்புநேரம் -
காற்பந்துப் போட்டியின்போது எதிரணி வீரரைக் கோபத்தில் முத்தமிட்ட வீரர்

படம்: Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

காற்பந்துப் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கோபமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதும், திட்டுவதும் அவ்வப்போது நடப்பது இயல்பு.

ஆனால் கோபத்தில் எதிரணி வீரரை முத்தமிட்டுப் பார்த்ததுண்டா?

எதிரணி வீரருக்கு முத்தமா?

ஆம்!

நேற்று முன் தினம்(ஏப்ரல் 13) பெர்ன்லீ, கார்டிஃப் மோதிய இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டியில் அந்தச் சம்பவம் நடந்தது.

பெர்ன்லீ அணியின் அஷ்லே பார்ன்ஸ் (Ashley Barnes), கார்டிஃப் அணியின் ஜோ பென்னட்டை மூக்கில் முத்தமிட்டுள்ளார்.

இரு வீரர்களும் அதிரடியாக ஆடும்போது மோதல் ஏற்பட்டு அது முத்தத்தில் முடிந்தது.

ஆனால் நடுவரோ, போட்டியின் விதிகளை மீறியதாகக் கூறி இருவருக்குமே மஞ்சள் அட்டை கொடுத்தார்.

அந்தச் சம்பவம் தொடர்பாக இணையத்தில் பல நகைச்சுவை Memeகள் பகிரப்பட்டு வருகின்றன.

ஆட்டத்தை பெர்ன்லீ 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்