Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19: நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்கும் டேவிட் பெக்கம்

காற்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கம், COVID-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும் நோக்கில் நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
COVID-19: நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்கும் டேவிட் பெக்கம்

(படம்: REUTERS/Carlo Allegri

காற்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கம், COVID-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கு உதவும் நோக்கில் நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளார்.

"All In Challenge'' என்னும் தரப்புக்கு ஐவர் கலந்து கொள்ளும் காற்பந்துப் போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.

"All In Challenge'' போட்டிகளில் பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் ரசிகர்களுடன் இணைந்து விளையாடுவார்கள்.

போட்டியில் ரசிகர்கள் பங்கேற்க "All In Challenge''-யின் 10 டாலர் மதிப்புள்ள சீட்டுகளை வாங்க வேண்டும்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ரசிகர்கள் பிரபலங்களுடன் விளையாடுவார்கள்.

மென்செஸ்ட்டர் யுனைட்டட், ரியல் மாட்ரிட் அணிகளும் அத்தகைய நிதி திரட்டும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பெக்கம் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்