Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FIFA-வின் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்றார் லயனல் மெஸ்ஸி

FIFA எனப்படும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் விளையாட்டாளர் என்னும் விருதை, அர்ஜெண்ட்டினாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி பெற்றிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
FIFA-வின் சிறந்த ஆட்டக்காரர் விருதைப் பெற்றார் லயனல் மெஸ்ஸி

(படம்: AFP/Marco Bertorello)

FIFA எனப்படும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் விளையாட்டாளர் என்னும் விருதை, அர்ஜெண்ட்டினாவைச் சேர்ந்த லயனல் மெஸ்ஸி பெற்றிருக்கிறார்.
இதற்குமுன் அவர் இந்த விருதை, 2015ஆம் ஆண்டு பெற்றார். உலகின் ஆகச் சிறந்த காற்பந்து வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்படுவது இது ஆறாவது முறை.

லிவர்பூல் தற்காப்பு ஆட்டக்காரர் வெர்ஜில் வான் டேஜ் (Virgil van Dijk), 5-முறை விருது வென்ற
கிறிஸ்டியானோ ரோனால்டோ (Cristiano Ronaldo) இருவரையும் மிஞ்சி, மெஸ்ஸி இந்த விருதைக் கைப்பற்றியிருக்கிறார்.

பெண்கள் பிரிவில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டக்காரர் மேகன் ரேபினோ (Megan Rapinoe_ உலகின் சிறந்த காற்பந்து வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்