Images
  • manchester (1)
    (படம்: REUTERS/Jon Super)

1 பில்லியன் யூரோ செலவு செய்துள்ளது மென்செஸ்ட்டர் சிட்டி காற்பந்து அணி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் முன்னணி அணியான
மென்செஸ்ட்டர் சிட்டி அதன் குழுவை அமைக்க ஒரு பில்லியன் யூரோ செலவு செய்துள்ளது.

அந்த விவரத்தை சுவிட்ஸர்லந்தைச் சேர்ந்த CIES காற்பந்து ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மெய்ன் அணி 913 மில்லியன் யூரோ செலவு செய்துள்ளது.

ஸ்பெயினின் ரியல் மட்ரிட் அணி 902 மில்லியன் யூரோ செலவிட்டுள்ளது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட் 751 மில்லியன் யூரோவும், லிவர்ப்பூல் அணி 639 மில்லியன் யூரோவும் அணிகளை அமைக்க செலவு செய்துள்ளன.

ஜெர்மனியின் பாடர்போர்ன் குறைந்த செலவில் அதன் அணியை அமைத்துள்ளது. அது 4 மில்லியன் யூரோ செலவில் அணியை உருவாக்கியதாக ஆய்வு நிறுவனம் கூறியது.

ஆய்வுகளுக்கு ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, பிரெஞ்சு, ஸ்பெயின் ஆகியவை உட்படுத்தப்பட்டன.  

Top