Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

Formula One 2019இன் முதல் பந்தயத்தை பாட்டாஸ் வென்றார்

மெர்ஸிடிசின் வல்டாரி பாட்டாஸ் (Valtteri Bottas) ஆஸ்திரேலியாவில் நடந்த Formula Oneஇன் இந்தப் பருவத்துக்கான முதல் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
Formula One 2019இன் முதல் பந்தயத்தை பாட்டாஸ் வென்றார்

படம்: AAP/Julian Smith/via REUTERS

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மெர்ஸிடிசின் வல்டாரி பாட்டாஸ் (Valtteri Bottas) ஆஸ்திரேலியாவில் நடந்த Formula Oneஇன் இந்தப் பருவத்துக்கான முதல் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

308 கிலோ மீட்டர் கொண்ட ஆஸ்திரேலியப் போட்டித் தடத்தை பாட்டாஸ் ஒரு மணி நேரம் 25 நிமிடம், 27.325 விநாடிகளில் சுற்றிவந்தார்.

F1 உலக விருதை கடந்த ஆண்டு வென்ற லூயிஸ் ஹேமில்ட்டன் (Lewis Hamilton) இரண்டாம் இடத்தில் முடித்தார்.

ரெட்புல்லின்(RedBull) வெர்ஸ்டாப்பென் (Verstappen) மூன்றாம் இடத்தில் முடித்தார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபெராரியின் (Ferrari) செபாஸ்டியன் வெட்டல் (Sebastian Vettel) நான்காம் இடத்தில் வந்தார்.

அடுத்த பந்தயம் பஹ்ரைனில் மார்ச் 31ஆம் தேதி நடக்கவிருக்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்