Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து: COVID-19 விதிமுறை மீறலால் பிரேஸில் - அர்ஜெண்டினா ஆட்டம், தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் நிறுத்தப்பட்டது

காற்பந்து: COVID-19 விதிமுறை மீறலால் பிரேஸில் - அர்ஜெண்டினா ஆட்டம், தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் நிறுத்தப்பட்டது

வாசிப்புநேரம் -
காற்பந்து: COVID-19 விதிமுறை மீறலால் பிரேஸில் - அர்ஜெண்டினா ஆட்டம், தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் நிறுத்தப்பட்டது

படம்: REUTERS

பிரேஸிலுக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையிலான உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச்சுற்று ஆட்டம், தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது.

பிரேஸிலின் (சாவ் பாவ்லோ)Sao Paulo நகரில் அந்தக் குழப்படி நேர்ந்தது.

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியிலும் விளையாடுகின்றனர்.

அவர்கள் பிரேஸிலின் தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மீறியதாக அதிகாரிகள் குற்றம்சுமத்தினர்.

பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகியவற்றுக்குச் சென்றிருந்த பயணிகள், பிரேஸிலுக்குச் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில், பிரேஸிலின் அதிகாரிகள் திடலுக்குச் சென்று ஆட்டத்தை நிறுத்தினர்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அது அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

நடுவர், அதிகாரிகள் ஆகியோர் சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை FIFA ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் சமர்ப்பிப்பர்.

என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைக் குழு முடிவு செய்யும் என்று தென்னமெரிக்கக் காற்பந்துச் சம்மேளனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்