Images
  • Break Dance
    (படம்: AFP/Lionel Bonaventure)

2024 ஒலிம்பிக் போட்டிகளில் பிரேக் டான்ஸ்?


2024 ஒலிம்பிக் போட்டிகளில் பிரேக் டான்ஸைச் சேர்க்க போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான விண்ணப்பத்தை ஒலிம்பிக் மன்றத்திடம் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2024 ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெறவிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளை மேலும் நகர்ப்புறச் சூழலை ஒத்ததாகவும் கூடுதல் கலையம்சங்கள் சேர்ந்ததாகவும் அமைக்க விரும்புவதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

2024 ஒலிம்பிக் போட்டிகளில் பிரேக் டான்ஸ் இடம்பெற்றல் அது தனித்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் அலையாடல், ஸ்கேட் போர்டிங் போன்ற விளையாட்டுகள் முதல்முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறவுள்ளன. 

Top