Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ண வெற்றியாளர்களை முன்கூட்டியே கணிக்கும் பூனை

உலகக் கிண்ணத்தில் எந்தக் குழு வெற்றிபெறும் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் விசிறிகளுக்கு விடையளிக்க பூனை ஒன்று பயிற்சி செய்து வருகிறதாம். 

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ண வெற்றியாளர்களை முன்கூட்டியே கணிக்கும் பூனை

படம்: Pixabay

உலகக் கிண்ணத்தில் எந்தக் குழு வெற்றிபெறும் என்று ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் விசிறிகளுக்கு விடையளிக்க பூனை ஒன்று பயிற்சி செய்து வருகிறதாம்.

பூனையின் பெயர் அக்கீலிஸ் (Achilles).

அந்த வெள்ளைப் பூனை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள (St Petersburg) அரும்பொருளகம் ஒன்றில் வசிக்கிறது.

இன்னும் இரு வாரங்களில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ள போட்டிகளின் முடிவுகளை அக்கீலிஸ் பூனை சரியாக கணிக்கும் என்று பலர் நம்புகின்றனர்.

பூனைக்கு முன்னால் இரு கிண்ணங்களில் உணவு வைக்கப்படும்.

ஒவ்வொன்றும் ஒரு காற்பந்துக் குழுவின் கொடியைக் கொண்டிருக்கும்.

பூனை எந்தக் கிண்ணத்தைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை வைத்து அதன் முடிவு கணிக்கப்படும்.

இதற்கு முன் 2017இல் அது Confederations கிண்ண முடிவுகளைச் சரியாகக் கணித்தது.

உலகக் கிண்ணத்தின் முடிவுகளை விலங்குகள் கணிப்பது இது முதல்முறை அல்ல. இதற்கு முன் 2010இல் பால் (Paul) என்ற கணவாய் ஸ்பெயினை வெற்றிக் குழு எனச் சரியாகக் கணித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்