Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல் அணிகள் வெற்றி

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் காலிறுதிச் சுற்றுப் போட்டிகளில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல் அணிகள் வெற்றிபெற்றன.

வாசிப்புநேரம் -
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல் அணிகள் வெற்றி

ப்டம்: AP

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் முதல் காலிறுதிச் சுற்றுப் போட்டிகளில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல் அணிகள் வெற்றிபெற்றன.

முதல் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று அதிகாலை நடந்துமுடிந்தன.

லிவர்ப்பூல், போர்டோ அணிகள் மோதிய ஆட்டத்தில் லிவர்ப்பூல் 2 - 0 என்ற கோல் எண்ணிக்கையில் போட்டியை வென்றது.

போட்டி தொடங்கியதிலிருந்தே அதிரடியாக ஆடிய லிவர்ப்பூல் அணி முதல் பாதியின் 5ஆவது நிமிடத்திலும், 26ஆவது நிமிடத்திலும் கோல்கள் புகுத்தின.

மற்றோர் ஆட்டத்தில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியும் மென்செஸ்ட்டர் சிட்டியும் மோதின.
அதில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் 1 - 0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.

ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் ஹாட்ஸ்பர் அணி கோலைப் புகுத்தியது.

நாளை அதிகாலை 3 மணிக்கு மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியும், பார்சலோனா அணியும் பொருதுகின்றன.

மற்றோர் ஆட்டத்தில் யுவென்ட்டஸ் அணியை ஏஜாக்ஸ் அணி சந்திக்கிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்