Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

F1 கார்ப்பந்தயம்: இந்த ஆண்டு சீனாவில் நடக்கவிருந்த பந்தயம் ரத்து

F1 கார்ப்பந்தயம்: இந்த ஆண்டு சீனாவில் நடக்கவிருந்த பந்தயம் ரத்து

வாசிப்புநேரம் -

சீனாவில் இந்த ஆண்டு நடக்கவிருந்த F1 கார்ப்பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக F1 கார்ப்பந்தய அமைப்பு அறிவித்துள்ளது.

துருக்கியில் பந்தயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 நோய்த்தொற்று காரணமாக இந்தப் பருவத்தின் F1 கார்ப்பந்தயப் போட்டிகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ஒத்திவைக்கப்பட்டன.

இந்தப் பருவத்தில் 17 பந்தயங்கள் மட்டும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பஹ்ரெய்னில் நவம்பர் மாதம் இரண்டு பந்தயங்களும் அபுதாபியில் டிசம்பர் மாதம் ஒரு பந்தயமும் நடக்கவிருக்கின்றன.

இந்தப் பருவத்தில் இதுவரை 6 பந்தயங்கள் நடந்துள்ளன. அவை அனைத்திலும் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

வரும் நாள்களில் சில பந்தயங்களின்போது குறைந்த அளவிலான ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடக்கவிருந்த பந்தயங்கள் நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்