Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகள் - 3ஆம் நாள் நிறைவில்..

ஆஸ்திரேலியாவின் Gold Coastஇல் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் 3ஆம் நாள் நிறைவில்...

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் போட்டிகள் - 3ஆம் நாள் நிறைவில்..

(படம்:AFP/Anthony WALLACE)

ஆஸ்திரேலியாவின் Gold Coastஇல் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளின் 3ஆம் நாள் நிறைவில்,

200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சலில் தென் ஆப்பிரிக்காவின் சாட் லி கிளோ (Chad Le Clos) தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

அவர் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு நிமிடம் 54 வினாடிகள்.

காமன்வெல்த் போட்டிகளில் தொடர்ச்சியாக அவர் பெற்றிருக்கும் 3ஆவது தங்கப்பதக்கம் அது.

100 மீட்டர் நெஞ்சு-நீச்சலில் இங்கிலாந்தின் எடம் பீட்டி (Adam Peaty) தங்கம் வென்றார்.

50 மீட்டர் எதேச்சைப் பாணி நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலியர் கேட் கேம்பல் (Cate Campbell) தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

எடைதூக்கும் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் ரகலா தங்கம் வென்றார்.

அதனையும் சேர்த்து இந்தியா இதுவரை 4 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

இனி, நாடுகளின் பதக்கப் பட்டியல்:

ஆஸ்திரேலியா 20 தங்கப் பதக்கங்களுடன் முதல்நிலையில் உள்ளது.

14 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது நிலையிலும், 5 தங்கப் பதக்கம் பெற்ற கனடா மூன்றாவது நிலையிலும் உள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்