Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: முதல் நிலையில் ஆஸ்திரேலியா

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: முதல் நிலையில் ஆஸ்திரேலியா

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: முதல் நிலையில் ஆஸ்திரேலியா

(படம்: Reuters)

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் (Gold Coast) நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில், ஆஸ்திரேலிய ஆடவர் நீச்சல் குழு, 4க்கு-200 மீட்டர் எதேச்சைப் பாணி தொடர் நீச்சல் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது. அது 7 நிமிடம் 5.97 விநாடிகளில் போட்டியை முடித்து வெற்றி கண்டது.

அந்த வெற்றியையும் சேர்த்து மொத்தம் 31 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முதலிடம் -ஆஸ்திரேலியா - 31 தங்கப்பதக்கங்கள்

இரண்டாமிடம் - இங்கிலாந்து - 19 தங்கப் பதக்கங்கள் 

மூன்றாமிடம் - கனடா - 7 தங்கப் பதக்கங்கள்
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்