Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

IPL போட்டியில் பங்கேற்கச் சென்றவர்களில் 13 பேருக்கு COVID-19

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கவிருக்கும் இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் (IPL)போட்டியில் பங்கேற்கச் சென்றவர்களில் 13 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கவிருக்கும் இந்தியப் பிரிமியர் லீக் கிரிக்கெட் (IPL)போட்டியில் பங்கேற்கச் சென்றவர்களில் 13 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

13 பேரில் இருவர் விளையாட்டு வீரர்கள் என்று கூறப்பட்டது.

கடந்த 20ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதிவரை 1,998 முறை நோய்த்தொற்றுக்கான மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

நோய்த்தோற்று உள்ளவர்களுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அது கூறியது.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இந்திய அணியின் வீரர் என்று ESPN நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 10 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 2 வாரம் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள்.

உலக அளவில் பிரபலமான இந்தியாவின் IPL கிரிக்கெட் போட்டி கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கிறது.

இந்தப் பருவத்திற்கான 53 ஆட்டங்களும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கும்.

போட்டி செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்குகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்