Images
  • cristiano ronaldo
    படம்: REUTERS/Toby Melville

மீண்டும் Manchester United அணியில் சேர்கிறார் ரொனால்டோ

உலகப் புகழ்பெற்ற காற்பந்தாட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), Manchester United காற்பந்து அணியில் மீண்டும் சேர ஒப்பந்தம் செய்துள்ளார்.

Juventus அணியில் விளையாடி வந்த அவர், எதிர்பாராத விதமாய் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியில் சேர்கிறார்.

முன்னர், அவர் மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணியிலிருந்து Real Madrid அணிக்குச் சென்றிருந்தார்.

ரொனால்டோ ஒப்பந்தம் குறித்து Manchester United அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டது.

அவரை மீண்டும் அணியில் சேர்த்துகொள்வதில் அணி மகிழ்ச்சி தெரிவித்தது.

ரொனால்டோ, Manchester City அணியில் சேரவிருப்பதாக முன்னர் கூறப்பட்டிருந்தது.

ஆனால் 24 மணி நேர இடைவெளியில் அந்த முடிவு மாற்றப்பட்டது.

அந்த ஈராண்டு ஒப்பந்தம் 33 மில்லியன் டாலர் மதிக்கத்தக்கது என்று Sky Sport Italia செய்தி நிறுவனம் தெரிவித்தது.

ஒவ்வொரு காற்பந்துப் பருவத்திற்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு 25 மில்லியன் யூரோ வழங்கப்படவிருக்கிறது. 

Top