Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

பெண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் உலகச் சாதனை

பெண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் உலகச் சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் டாலைலா முகமது (Dalilah Muhammad).

வாசிப்புநேரம் -
பெண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் உலகச் சாதனை

(படம்: Reuters/ Kirby Lee-USA TODAY Sports)


பெண்கள் 400 மீட்டர் தடையோட்டத்தில் உலகச் சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் டாலைலா முகமது (Dalilah Muhammad).

நேற்று நடந்த அமெரிக்க விருதுப் போட்டியில் ஒலிம்பிக் வெற்றியாளரான டாலைலா 52.20 வினாடிகளில் பந்தயத்தை முடித்தார்.

அதன் மூலம் அவர் 2003ஆம் ஆண்டு ரஷ்யாவின் யூலியா பெச்சோன்கினா (Yuliya Pechonkina) 52.34 வினாடிகளில் ஏற்படுத்திய சாதனையை முறியடித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பயிற்சியின் போது கீழே விழுந்ததால் 29 வயது டாலைலாவுக்குத் தலையில் அடிபட்டிருந்தது.

எனினும் உலகச் சாதனையைப் படைப்பதற்கு அது தடையாக அமையவில்லை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்