Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றியைத் தாய்லந்து குகையிலிருந்து தப்பியவர்களுக்கு சமர்ப்பிக்கும் ஆட்டக்காரர்

பிரான்ஸின் உலகக் கிண்ணக் காற்பாந்தாட்ட அரையிறுதிச் சுற்றின் வெற்றியை ஆட்டக்காரர் பால் பக்பா (Paul Pogba) தாய்லந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களுக்குச் சமர்பித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணம்: பிரான்ஸ் வெற்றியைத் தாய்லந்து குகையிலிருந்து தப்பியவர்களுக்கு சமர்ப்பிக்கும் ஆட்டக்காரர்

(படம்: Paul ELLIS / AFP)

பிரான்ஸின் உலகக் கிண்ணக் காற்பந்தாட்ட அரையிறுதிச் சுற்றின் வெற்றியை ஆட்டக்காரர் பால் பக்பா (Paul Pogba) தாய்லந்து குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களுக்குச் சமர்பித்துள்ளார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg), பிரான்ஸ் பெல்ஜியத்தை ஒன்றுக்கு-பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்த வெற்றியைத் தாய்லந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறிய பக்பா, அந்த சிறுவர்களின் வலிமையையும் பாராட்டினார். அவர் தமது Twitter பக்கத்தில் அந்த செய்தியை வெளியிட்டார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இறுதிச் சுற்றைப் பார்வையிட சிறுவர்களின் Wild Boars காற்பந்தாட்டக் குழுவிற்கு FIFA முதலாளி ஜியானி இன்ஃபண்டினோ (Gianni Infantino) கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், சிறுவர்களின் உடல்நலன் காரணமாக அவர்களால் தற்போது மாஸ்கோவுக்குப் பயணம் செய்ய இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

வேறொரு தருணத்தில் சிறுவர்களுடன் ஒன்றுகூடி கொண்டாட திட்டமிட்டுள்ளதாக FIFA தொடர்பாளர் கூறியுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்