Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தள்ளிப்போடப்பட்ட ஒலிம்பிக்ஸ் - பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்படும் மாபெரும் வண்ண வளையச் சின்னம்

தோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், ஒலிம்பிக்ஸ் சின்னமான 5 மாபெரும் வண்ண வளையங்கள் பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
தள்ளிப்போடப்பட்ட ஒலிம்பிக்ஸ் - பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்படும் மாபெரும் வண்ண வளையச் சின்னம்

(படம்: AFP / Behrouz MEHRI)

தோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால், ஒலிம்பிக்ஸ் சின்னமான 5 மாபெரும் வண்ண வளையங்கள் பராமரிப்புக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

அவற்றின் எடை சுமார் 69 டன்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தோக்கியோவின் ஒடைபா (Odaiba) கரையோரப் பகுதியில் ஒன்றுக்குள் ஒன்றாய்க் காட்சியளிக்கும் வளையங்கள் நிறுவப்பட்டன.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுபெறுவதாக இருந்த ஆகஸ்ட் 9ஆம் தேதிவரை அந்த வளையங்களை அங்கு வைத்திருக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றதும், அங்கு உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகளின் சின்னத்தை நிறுவ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், COVID-19 கிருமிப்பரவலால், அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.

அதனையடுத்து, பாதுகாப்புச் சோதனைகள் நடத்தி, பராமரிப்பதற்காக 4 மாதங்களுக்கு வளையங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டன.

ஒலிம்பிக் போட்டிகள் இப்போதைக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்