Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

யூரோ 2020 ஆட்டத்தின்போது மயக்கமடைந்த வீரர் கிரிஸ்டியன் எரிக்சனுக்கு நினைவு திரும்பியது

யூரோ 2020 காற்பந்துப் போட்டியின்போது மயக்கமடைந்த பிரபல வீரர் கிரிஸ்டியன் எரிக்சனுக்கு (Christian Eriksen), நினைவு திரும்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
யூரோ 2020 ஆட்டத்தின்போது மயக்கமடைந்த வீரர் கிரிஸ்டியன் எரிக்சனுக்கு நினைவு திரும்பியது

(படம்: AFP/Friedemann Vogel)

யூரோ 2020 காற்பந்துப் போட்டியின்போது மயக்கமடைந்த பிரபல வீரர் கிரிஸ்டியன் எரிக்சனுக்கு (Christian Eriksen), நினைவு திரும்பியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

டென்மார்க் (Denmark), ஃபின்லந்து (Finland) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, டென்மார்க் வீரர் எரிக்சன் மயக்கமடைந்தார்.

சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் அவர் உடலில் அசைவு இல்லை.

உயிர் காப்புச் சிகிச்சை மூலம் பிழைத்த எரிக்சன், பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எரிக்சன் மயக்கமடைந்த பிறகு, ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், இரு அணிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஏற்பாட்டாளர்கள் மீண்டும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

1-க்கு 0 எனும் கோல் கணக்கில் ஃபின்லந்து வெற்றி பெற்றது. 

- Agencies/nh

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்