Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உதவி நடுவரைப் பந்தால் அடித்த ஜோக்கோவிச் - அமெரிக்கப் பொதுவிருதில் இருந்து வெளியேற்றப்பட்டார்

 உதவி நடுவரைப் பந்தால் அடித்த ஜோக்கோவிச் - அமெரிக்கப் பொதுவிருதில் இருந்து வெளியேற்றப்பட்டார்

வாசிப்புநேரம் -
உதவி நடுவரைப் பந்தால் அடித்த ஜோக்கோவிச் - அமெரிக்கப் பொதுவிருதில் இருந்து வெளியேற்றப்பட்டார்

படம்: AFP

உலக டென்னிஸ் தரவரிசையின் ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) உதவி நடுவரைப் பந்தால் அடித்த காரணத்தால் அமெரிக்கப் பொதுவிருதில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நேற்றிரவு நடந்த நான்காவது சுற்றுப்போட்டியில் 33 வயது ஜோக்கோவிச் ஸ்பெயினின் பாப்லோ கரெனோ பஸ்டாவைச் (Pablo Carreno Busta) சந்தித்தார்.

ஆட்டத்தின் நடுவில் ஜோக்கோவிச் தம் கால்சட்டையில் இருந்து ஒரு பந்தை யதார்த்தமாக வெளியே எடுத்து அடித்தார். அது உதவி நடுவரின் கழுத்தைப் பதம்பார்த்தது.

பந்தால் அடிவாங்கிய உதவிநடுவர் வலியால் துடித்துப்போனார்.

அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் நடுவர் ஜோக்கோவிச்சை ஆட்டத்திலிருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார்.

சம்பவத்திற்கு ஜோக்கோவிச் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் ஜோக்கோவிச் இந்த ஆண்டு அமெரிக்கப் பொதுவிருதில் எடுத்த புள்ளிகள், பரிசுத்தொகை போன்றவை மீட்டுக்கொள்ளப்படும்.

அதுபோக அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

உதவி நடுவரின் உடல்நிலை சீராக உள்ளது.

2020ஆம் ஆண்டு நடந்த டென்னிஸ் போட்டிகளில் தோல்வி காணாத ஜோக்கோவிச்சுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

இதுவரை 17 பொதுவிருதுகளை வென்றுள்ள ஜோக்கோவிச் இம்முறை அமெரிக்கப் பொதுவிருதை எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்