Images
  • Novak Djokovic
    (படம்: REUTERS/Loren Elliott)

அரை மனதாக இருந்த டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச் தோக்கியோ ஒலிம்பிக்ஸ் செல்ல முடிவு

டென்னிஸ் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் 34 வயது நோவாக் ஜோக்கோவிச் (Novak Djokovic) ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்.

விமானப் பயணத்திற்கு ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டதாகவும், செர்பியாக் குழுவுடன் (#TeamSerbia) இணையப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலியப் பொதுவிருது, பிரெஞ்சுப் பொதுவிருது, விம்பிள்டன் போட்டிகளை வென்றுள்ளார்.

அவர் Golden Grand Slam எனும் பட்டத்தைப் பெற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல வேண்டும், அமெரிக்கப் பொதுவிருதுப் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.

ஒலிம்பிக் பயணத்தை மேற்கொள்ள அவர் அரை மனதாக இருந்தார்.

கோவிட்-19 நெறிமுறைகள் ஜப்பானில் கடுமையாக இருப்பதாக அவர் கூறியிருந்தார். மேலும் போட்டிகள் வழக்கம்போல நடைபெறப்போவதில்லை என்பது அவருக்குத் திருப்தி அளிக்கவில்லை.

அதனால் அவர் தோக்கியோ செல்வதில் ஆர்வம் காட்டவில்லை.

விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.
எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

ஜப்பானிய அதிகாரிகள் COVID-19 பரவலை இதன் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என எண்ணுகிறார்கள்.  

Top